கடல்புரத்துத் தோணி என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு.
டேவிட் சித்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள்.
கன்னட மூலம் சசி தேஷ்பாண்டே..
’என் அன்பான சாரதி’ இந்தக் கதை படித்ததும் அப்படி ஒரு உணர்வலைகள். விதவையாகிவிட்ட மகளின் வேதனையை வெறுப்பை மாற்ற முயன்று தோற்ற விதவைத்தாய், அப்பாவின் குறைகளைக் கூறி மகளிடம் பேசுகிறாள்.மகள் கணவனுடன் இருந்த மகிழ்வைக்கண்டு தான் பொறாமைகொண்டதாகவும் கூறுகிறாள். தன் கணவனைப்பற்றிய குறைகள பகிர்கிறாள். அமைதியான ஆனால் ஒரு விதமான குருஷேத்திரக்களம் போன்ற குமுறலான உறவுகளுக்குள் சமநிலைகொண்டுவர அன்பான சாரதியாக தன் பேத்தியின் அன்பை நினைத்துக்கொண்டு செய்கிற யுத்தம் என்றே நினைக்கிறாள்.
”இவளை, என் மகள் ஆர்த்தியை ஒன்பது மாதங்கள் என் உடலில் வளர்த்தேன். அவளுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் உணர்ந்தேன் . ஒவ்வொரு சலனத்தையும் கூட. என் வலிகளும் அதிர்வுகளும் அவளை பாதிக்காது. அவ்வளவு பாதுகாப்பாக வயிற்றுக்குள் வைத்திருந்தேன். அதே மாதிரி இப்பொழுதும் என் மனவலிகளால் அடிகளாலும் தாக்கப்படாமல் பாதுகாப்பாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய மனவலிகளும் அடிகளும் என்னைத்தான் தாக்குகின்றன அவளோடு சேர்ந்து நானும் வேதனைப்படுகிறேன். என்னுடைய மற்றைய உணர்ச்சிகளைப்போல அவைகளும் வீணான , பயனற்ற வலிகளும் அடிகளும் தான். அதிலிருந்து என்னாலும் தப்ப முடியவில்லை.அவளையும் தப்பிவிக்கமுடியவில்லை. ”
அமரிக்காவில் பத்து பன்னிரெண்டு வயது பையன்கள் கூட பெண்களை கற்பழிக்கிறார்களாம். .............
.................. அம்மாதிரியான அரக்கர்களைப் பெற்றவர்கள் எப்படி அன்பான பெற்றோர்களாக இருக்கமுடியுமென்று நினைத்ததுண்டு. இப்போழுது தெரிகிறது எனக்கு. பிறப்பே ஒரு விபத்துதான்.
கொடுமையான விபத்து. நம் குழந்தைகள் நம்மவர்கள் என்று நம்பி நாம் தான் ஏமாந்து போகிறோம். நம்பிள்ளைகளைப்பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்றும் . ஆனால் காக்கைக்கூட்டில் வளர்ந்த குயிலின் குஞ்சு மாதிரி அவர்கள் எபொழுதும் அந்நியர்களே. ஆனாலும் பொறுப்பிலிருந்து நம்மால் தப்ப முடியாததுதான் அவலம். இன்றைக்கு என் மகள் மகிழ்ச்சியாக இருக்கிற மற்றவர்களை வெறுக்கிறாள் என்றால் தவறு என்னுடையது தான்.”
‘ஆமா உன் அப்பாதான் ஆனா எனக்கு என்னவாக இருந்தார் அவர் இறந்தப்பவே தொலையட்டுமுன்னு விட்டுட்டேன். அதுக்கப்பறம் ஒண்ணுமே இல்லை மிச்சமா , ஒண்ணும்..”
(ஆனா நான் என்று கேட்கும் மகளுக்கு..)
நீயா ? வெறும் புகையும் சிறு சாம்பலுந்தான் நீ. புகைக்கிற சிகரெட் மாதிரி . என் திருமண வாழ்க்கை மாதிரி எரிஞ்சு போனதுக எல்லாம் முடிஞ்சு போனதுக>
வேண்டாம் எனக்கு சொல்லாதே வேண்டாம்
ஒவ்வொரு வேண்டாமோடும் கையிலிருக்கும் படத்தை அடிக்கிறாள், கண்ணாடித்துண்டுகள் சிதறுகின்றன. இப்பொழுது அவர் நிர்வாணமாகிவிட்டார், அவலட்சணமாகவும். அப்பிடியும் எனக்கு இரக்கம் பிறக்கவில்லை. இறந்தவர்களுக்கு அல்ல, வாழ்கிறவர்களுக்குத்தான் அன்பும் அரவணைப்பும் தேவை. இறந்தவர்களுக்கு எதற்கு ? அவர்களிடம் விசுவாசமாகவும் இருக்கத்தேவையில்லை.
நீயும் மாதவும் அறைக்குள்ளாற இருந்து பேசி சிரிச்சப்ப ................
உம்மேல பொறாமைப்பட்டேன் .அவர் இறந்தப்ப மணி அடிச்சி பள்ளிக்கூடம் விட்டதும் ப்ரீதி எப்படி உணருவாளோ அப்படித்தான் நானும் உணர்ந்தேன். “
The story “My Beloved Charioteer” describes the emotional rupture of a widow mother from her widow daughter, Arti, which exists for inscrutable reasons. Here the mother constantly remains on qui vive for an opportunity to please her cross-grained daughter whose sense of dissatisfaction with and resultant aversion to life is canalized towards her docile mother in the form of fury ad anger. The protagonist epitomizes all the attributes of mother ranging from her unremitting anxiety for her child’s well being to self-assumed guilt consciousness at her misery. “If my daughter is so empty that she can hate people who are happy, the fault is, to some extent, mine.” (TIAOS p.56) the dead weight of the mortified love and rebuffed affection keep on assuming ingravescent proportions until one day when the protagonist peeved by the fact that Arti still derives strength for living from her selfish father, she indulges in paroxysms of anger, divulging his crudity and callousness as a husband and thus impels her daughter to ‘see’ her parents as people.