இங்கே..

வாசித்த புத்தகத்தைப் பற்றியும் அதன் சில வரிகளும்............

Sunday, February 13, 2011

கடல்புரத்துத் தோணி

கடல்புரத்துத் தோணி - டேவிட் சித்தையா மொழிபெயர்த்த சிறுகதை தொகுப்பிலிருந்து சில கதைகள்.

  கடல்புரத்துத் தோணி -எஸ்.கே. பொற்றேகாட்
தோணி ஓட்டும் மம்முவின் அலீயாவின் மீதான காதலும் சென்றடையமுடியாத அக்காதலுக்காய் அவன் தோணியோடு பேரலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததுமான ஒரு காதல்கதை.


 அந்த த் தோணியும் அவனை அடையாளம் கண்டுகொண்ட மாதிரி அலைகளில் அசைந்தாடுகிறது. கொஞ்சிக் குழைந்து மெல்ல நகர்ந்து அவன் காலடி அருகில் வந்து சேருகிறது அதற்கு உயிரில்லை என்று யார் சொல்வார்கள்?

‘எதற்காக அந்த ப் பூமரம்
இனமும் பூக்கவில்லை?
எப்பொழுது அந்த ப் பூமரம்
மலர, நான் தேன் குடிப்பேன்?”
ஒரு பேரலைப் பேயைப்போல வாய் பிளந்து அவனைத் தனக்குள் அடக்கிக்கொண்டது.
------------------------

மலையாளம் - மழைக்கும் மரணத்தின் நிறம்தான் - பி.சோமன்.
“முடியாது .இவனுக்கு இன்னோரு சென்மம் வேண்டாம். பெரிய வீட்டு அம்பட்டனாக இனியும் அவமானப்படமுடியாது.”
சிதையிலிருந்து எழுதவர்உ முயன்ற பெரிய வீட்டுக்காரனை அய்யாக்குட்டி பலவந்தமாகத் தீக்குழிக்குள் பிடித்துத் தள்ளினா. அவன் திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக அய்யாக்குட்டி விறகுக்கொள்ளிகள் மேலேயே விழுந்து கிடந்தான்.”

மராட்டி --வித்தியாசமனவள் அல்ல - ஊர்மிளா ஹரிசந்திர பவார்

அந்த தாயிகளே போல நானும் பொண்ணு தான் . தாயிதான். விதவைங்கரதாலே நான் மட்டும் வித்தியாசமானவ இல்ல.எனக்கும் அம்மாவாகனும் பிள்ளை பெறனும் பால்குடுக்கனும்ன்னு ஆசை இருக்கு.”
(தெலுங்கு ) பொம்மை மனிதர்கள் - காசிபட்லா வேணுகோபால்


நான் நம்பிய, ஊகித்த எல்லாமே உதிர்ந்து போயின. எந்த முடிவுமற்ற ஒரு கதையே மிஞ்சியது. கடிதங்களைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு முரளி மட்டுமே இருந்தான். ஆனால் இப்பொழுதோ? சேன்னக்கேசவுலு, சீனிவாசலு, சாயம்மா, ஐநூற்று அறுபது ரூபாய்கள். அவன் புகைபடம் இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னை வேட்டையாடி.... பொம்மை மனிதர்களின் பொய்த்தோற்றங்களைக் காட்டிக்கொண்டே இருக்கின்றன.
காவேரி - காசிபட்லா வேணுகோபால்

பிரளயமே புரண்டு வந்தாலும் , சரி நான் என்ன செய்தாலும் ,அவற்றைதான் ஆனந்தமாக அங்கீகரிக்க வேண்டுமென்ற அவளுடைய பிடிவாதத்தை என்னால் தாங்கமுடியவில்லை.
ஏன் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம நடந்து என்னை கஷ்டப்பட்டுத்தறே இவ்வளவு பொறுப்பு இல்லாம வாழ்ரத விட சே..
புரிந்துவிட்டது. நான் என்ன செய்தாலும் ஆனந்தமாக ஏற்கிற காவேரி. என் அலட்சியத்தை தாங்கமுடியாமல்..
என் கொலைக்கு சாட்சிகள் இல்லை!


(இந்தி)வீடு - ஸ்ரீகாந்த் வர்மா..
கண்ணிழந்த பிச்சைக்காரனும் மனைவியும்..